இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் ஒரு சிலந்தியைப் பிடித்து, எறும்புகள் கூட்டத்தின் நடுவே விடுகிறார். சிலந்தி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது, ஆனால் அதற்கு வழியில்லை. சிறிது நேரத்தில், அங்கிருந்த எறும்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிலந்தியைச் சுற்றி வளைத்து, அதைக் கொன்றுவிடுகின்றன.
View this post on InstagramA post shared by Alex Fourmis (@alexfourmisoff)
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் சிலந்தியின் இந்த நிலைமைக்கு வருத்தம் தெரிவிக்க, மற்றவர்கள் எறும்புகளின் ஒற்றுமையையும் வலிமையையும் பாராட்டி கருத்து கூறியுள்ளனர்.