மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள மும்ரா பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, 2018 மே மாதம் 19-ந்தேதி இரவு வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (32) என்ற வாலிபர், சிறுமியின் வாயை மூடி யாரும் இல்லாத இடத்துக்கு இழுத்துச் சென்றார்.
அங்கு வைத்து அவளை பலாத்காரம் செய்ததோடு,“இந்த சம்பவத்தை யாரிடமும் சொன்னால் உன் பெற்றோரை கொன்று விடுவேன்” என்று கொடூரமாக மிரட்டினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பி, பெற்றோரிடம் அழுகையுடன் உண்மையை தெரிவித்தாள்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவலில் புகாரளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், சந்தோஷ் மீது போக்சோ சட்டம் (POCSO Act) கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் போது, சந்தோஷின் குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி டி.எஸ். தேஷ்முக், குற்றவாளி சந்தோஷுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.