கோவை மாவட்டத்தில் விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சீமான்' சர்ச்சையை கிளப்பும் பாணியில் தெரிவித்ததாவது,"இசை இறைவனே இளையராஜா! சச்சினுக்கு விருது கொடுக்கும் அரசே, இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ தரவில்லை என்பதில் நாம் வெட்கப்பட வேண்டும்.
திரையில் நடிக்கும் ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும், விஜய்க்கு வந்த கூட்டம் வேற லெவல்ல வந்துஇருக்கும் ! இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் நடந்த சூழ்நிலை நமக்கே வராதென்று யாரும் உறுதி தர முடியாது.
பக்கத்து வீடு எரிகிறது என்று பார் என்று தூங்கினால், நாளை உன் சாம்பல் தான் பறக்கும்! நீ பெரிய வீடு கட்டிக்கொடுக்க நினைக்கிறாய்; நான் என் பிள்ளைகளுக்கு வாழக்கூடிய நாட்டை விட்டு செல்ல நினைக்கிறேன்.
நீ காசு சேர்க்கிறாய்; நான் சுவாசிக்க சுத்தமான காற்றை சேர்த்து விட்டு போகிறேன்!”என்று அவர் செய்த உரை, அரசியல் சூழலை சூடேற்றியது.