பாஜக இளைஞரணி சார்பில் மாரத்தான் போட்டி...பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.!
Seithipunal Tamil September 15, 2025 12:48 PM

செப்-21புதுச்சேரி பாஜக இளைஞரணி சார்பில் நடைபெறும் நமோ மரத்தான் நிகழ்ச்சியை காணொளி மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி  துவங்கி வைக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை  முன்னிட்டு  புதுச்சேரியில் செப்- 21 தேதி பாஜக  இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர்  நமச்சிவாயம், மாநில இளைஞர் அணி தலைவர் வருண், மாநிலத் துணைத் தலைவர் சரவணன், ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர்கள் ஆடலரசன், விக்ரமன் நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் தமிழரசன் , மகேந்திரன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள்  கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொள்ள  ரெஜிஸ்ட்ரேஷன் QR Registration code வெளியிட்டனர். 

மேலும் Sept 21 காணொளி மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் நமோ மரத்தான் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் Drug free இந்தியா , உடல் நலம் பேணிக்காத்தல் , ஒழுக்கம் , இளைஞர்களின் நலம் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் 75 இடத்தில் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் சுமார் 3000 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கலந்து கொள்ள உள்ள அனைத்து போட்டியாளருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் 150000 மதிப்புள்ள பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.