திமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல பதில் சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பத்து நாள் கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார். அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளது. விரைவில் சந்திப்பேன். அதேபோல் டிடிவி, செங்கோட்டையன் அனைவரையும் சந்திப்பேன்.
விஜய் பிரச்சாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு வெளிவரவில்லை. விஜய் உடன் கூட்டணி குறித்து, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் அது நல்லதாகவே நடக்கும். டெல்லி செல்வதற்கு வேலையில்லை, பயணங்கள் தற்போது இல்லை. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2 தினங்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் என்னுடன் பேசினார். சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். உறுதியாக சந்திப்போம் எனக் கூறியுள்ளேன்” என்றார்.