சபரிமலை ஐயப்பன் கோவில், மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படுகிறது. அதன்படி, புரட்டாசி மாத பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 21-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில், பம்பையில் வரும் 20-ஆம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடைபெற உள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கிறார்கள். மாதபூஜை காலத்தில் எந்த இடையூறும் இல்லாமல் சங்கமம் நடத்த கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கமாக, மாதபூஜை நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த முறை 19, 20 ஆகிய தேதிகளில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களிடையே அதிர்ச்சி மற்றும் அதிருப்தி நிலவுகிறது.