சமீப காலமாக புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதன் காரணமாக சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
இந்தத் தாக்குதலில் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டார். இதையடுத்து ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் படி ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.