Simbu: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தக் லைப். இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இந்த படம் அமையவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் படத்தில் சிம்புவின் கேரக்டர் அவருடைய நடிப்பு என அனைத்துமே பிரமாதமாக இருந்தன. அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அது சம்பந்தமான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது.
ஆனால் இந்த படத்தை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் உருவாகும் படம் டிராப் ஆகுமா இல்லையா என்பது தான் பலரின் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் அந்த அளவுக்கு படத்தின் மீது பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இருந்தாலும் படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ் தாணு கண்டிப்பாக இந்த படம் வரும் என கூறுகிறார். வெற்றிமாறனும் அதற்கான வேலைகளில் தான் இப்போது ஈடுபட்டு வருகிறோம் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு முரட்டு சிங்கிளாக வலம் வரக்கூடிய நடிகராக சிம்பு இருக்கிறார்.
ஆரம்பத்தில் காதல் கிசுகிசுக்களில் சிக்கி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து இப்போது அனைவரும் அதிசயத்து பார்க்கக்கூடிய ஒரு நடிகராக மாறி இருக்கிறார் சிம்பு. குறிப்பாக அவருடைய தியானம் ஆன்மீகம் உடற்பயிற்சி என எல்லாமே அவருடைய தோற்றத்தையும் உள் மனதையும் மாற்றி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சரியான கம் பேக் திரைப்படமாக அவருக்கு மாநாடு திரைப்படம் அமைந்தது. அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே அவர் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
பத்து தல, வெந்து தணிந்தது காடு என அவருடைய கேரக்டர் பேசும்படியாக அமைந்தன. இந்த நிலையில் சிம்புவின் திருமணம் எப்போது என்றுதான் அனைவரின் கேள்வியாக இப்போது இருந்து வருகிறது. விஷால் திருமணம் கூடிய சீக்கிரம் நடைபெற இருக்கின்றது. அதேபோல சிம்புவின் திருமணத்தையும் எதிர்பார்த்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் காத்திருக்கின்றனர். இதில் ஜீ தமிழில் இப்போது மிகவும் பரபரப்பாக பேசக்கூடிய நிகழ்ச்சியாக இருப்பது சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சி. அதில் டி ராஜேந்திரன் நடுவராக இருந்து வருகிறார்.
கூமாபட்டி புகழ் தங்கப்பாண்டி அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை சாந்தினி இருந்து வருகிறார். இவர் டி ராஜேந்திரன் முன்னாடியே எனக்கு சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என மிகவும் வெட்கப்பட்டு கூறினார். அதைக் கேட்டதும் டி ராஜேந்திரன் காதல் என்பது மனைவி மீது மட்டும் வைத்திருப்பது கிடையாது. மகன்கள் மீதும் மகள்கள் மீதும் வைத்திருப்பதும் ஒருவித காதல் தான். அப்படித்தான் என்னுடைய மகன் மீதும் நான் வைத்திருக்கிறேன்.
எனக்கு எப்படி என்னுடைய மனைவி எல்லாம் ஆக இருக்கிறாரோ அதைப்போல சிம்புவுக்கு அவருடைய மனைவி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் நினைத்தால் நானும் என் மனைவியும் எந்த பெண்ணை காட்டுகிறோமோ அதை வேண்டாம் என்று சொல்லாமல் உடனே சிம்பு திருமணம் செய்து கொள்வார். ஆனால் அப்படிப்பட்ட திருமணம் அவருக்கு இருக்கக் கூடாது. அவரை தேடி சிம்பு தான் வேண்டும் என மனப்பூர்வமாக எந்த பெண் வருகிறாரோ அவர்தான் சிம்புவுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
chandhini
அதுவரைக்கும் நாங்கள் காத்திருப்போம். ஆனால் எந்த விதத்திலும் என்னுடைய மகனை நான் திருமணம் செய்து கொள் என அடிக்கடி கூறி தொந்தரவு செய்ய மாட்டேன். இப்படித்தான் மற்ற பெற்றோர்களும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்திற்காக திருமணம் செய்து அந்தத் திருமணம் கடைசியில் எப்படி ஆகும் என்பது யாராலும் சொல்ல முடியாது. அதனால் சிம்புவை தேடி இவர் தான் வேண்டும் என எந்தப் பெண் மனதார வருகிறாரோ அவர்தான் சிம்புவுக்கு மனைவியாக வேண்டும் என டி ராஜேந்திரன் அந்த நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.