GV Prakash: நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இட்லி கடை படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷின் பேச்சு தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை இயக்கினார். அப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் வசூல் அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில் தனுஷின் அடுத்த திரைப்படமான இட்லி கடை தயாராகி இருக்கிறது.
இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் அக்டோபர் 5ம் தேதிக்கு திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
அதில் நடிகர் தனுஷ் பேசும் போது எனக்கு ஜிவி பிரகாஷ் மாதிரி ஒரு நண்பர் கிடைத்தது பெரிய விஷயம். அவர் ரீல்ஸுக்கு பாடல்களை செய்யவில்லை. ஒவ்வொரு பாடலும் ஆத்மார்த்தமாக செய்து இருக்கிறார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது ஜிவிக்கு இருக்கு எனப் பேசி இருந்தார்.
அதனை தொடர்ந்து பேசிய ஜிவி பிரகாஷ், என்னை தனுஷ் தன்னுடைய ராயன் படத்தில் நடிக்க அழைத்து இருந்தார். ஒரு தம்பி ரோல் எனக்கு கிடைத்தாலும் அதில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டேன். சினிமாவில் கூட நான் துரோகம் செய்யும் கேரக்டரில் நடிக்க முடியாது.
அந்த நால்வரில் ஒருவராக நான் என்றுமே இருக்க மாட்டேன் என ஜிவி பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார். தற்போது அந்த நால்வர் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. பலரும் சிவகார்த்திகேயன், அனிருத், நயன், விக்னேஷ் சிவன் தான் அந்த நால்வர் என கலாய்த்து வருகின்றனர்.
இதில் தனுஷ் அறிமுகப்படுத்திய அனிருத், சிவா இருவரும் தற்போது உச்சத்தில் உள்ளனர். நயன், விக்னேஷ் சிவன் தங்கள் காதலை தனுஷின் படத்தில் தான் ஆரம்பித்தனர். இருந்தும் தனுஷுக்கு எதிராக அவர்கள் செய்த சமூக அறிக்கை பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இதை குத்திக்காட்டும் விதமாகவே ஜிவிபிரகாஷ் பேசி இருக்கலாம் என்ற யூகங்களும் கிளம்பி இருக்கிறது. ஒவ்வொரு தனுஷுன் இசைவெளியீட்டு விழாவிலும் இப்படி ஒரு பிரச்னை எழுந்து வருவதாக அவர் ரசிகர்கள் பேசிவருவதையும் பார்க்க முடிகிறது.