Idli kadai: கோலிவுட்ல சிறந்த நடிகராக பார்க்கப்பட்டாலும் தனுஷ் தொடர்பாக பல சர்ச்சைகள் உண்டு. அவரை பல நடிகைகளுடனும் தொடர்புபடுத்தி பல செய்திகள் பலமுறை வெளிவந்திருக்கிறது. ஆனால் எதற்கும் அவர் விளக்கம் சொன்னது இல்லை. அதோடு யாருடனெல்லாம் அவர் நெருக்கமாக இருந்தாரோ அவர்களுடன் ஏதோ ஒரு வகையில் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த பல வருடங்களாகவே அவர்களுடன் தனுஷ் பேசுவதில்லை. அனிருத், சிவகார்த்திகேயன் என அந்த பட்டியல் நீள்கிறது.
சிவகார்த்திகேயனை தனது 3 படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். அதன்பின் அவரை வைத்து எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது தனுஷ்தான்.
அதேபோல் அனிருத்தை சினிமாவில் வளர்த்தவரும் தனுஷ்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அனிருத்தும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்து பல படங்களிலும் வேலை செய்ய அனிருத் தனுஷ் படங்களுக்கு இசையமைப்பதில்லை.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசும்போது ‘பேமஸாக ரெண்டு வழி இருக்கு.. ஒன்னு ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி டாப்ல போய் உட்காருவது.. இரண்டாவது டாப்பில் இருக்கிறவன அடிக்கிறது.. உங்கள வச்சு மேல போனவங்க.. உங்களால வளந்தவங்க.. நீங்க வாழ்க்கை கொடுத்தவங்க.. நேருக்கு நேர் நடித்து மோதுனா ஓகே.. ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி உட்கார்ந்து பேசுறது.. நான் ஸ்டாப் ரோர்’ என கோபத்துடன் பேசி இருந்தார்.
அந்த மேடையில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசியது சிவகார்த்திகேயனைத்தான் என பலரும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள். பொதுவாக நடிகர்களின் மேனேஜர்கள் மேடையில் பேச மாட்டார்கள். ஆனால் தனுஷ்தான் தனது மேனேஜரை இதை சொல்லும்படி சொல்லி இருக்கிறார் என்கிற கருத்தும் உலா வருகிறது.