புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, விஜயின் அரசியல் சுற்றுப்பயணத்தை குறித்துக் கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தினார்.அவர் தெரிவித்ததாவது,"விஜய் வருகையால் தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்ற எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.
அது வெறும் மாயை.அவரது சுற்றுப்பயணத்தின் போது பொதுசொத்துக்கள் சேதமடைந்துள்ளன. சட்ட விதிகளை மீறியிருப்பின், சட்டம் தன் கடமையை நிச்சயமாகச் செய்யும்.மேலும், ஆம்புலன்ஸ் வழியில் சிக்கியது குறித்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
ஆனால் ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், எந்த பகுதியிலிருந்தாலும் ஆம்புலன்ஸ் செல்லும் வழியை தி.மு.க. தடுத்து நிறுத்தியதில்லை. கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.
கடந்த 2011-ஆம் ஆண்டு வடிவேலுவின் பிரசாரத்திலும் விஜய் திடீரென களமிறங்கினார். அப்போது கூட்டம் குவிந்தாலும், அது வாக்காக மாறவில்லை.
இன்றும் அதே நிலைதான்.மேலும்,சனி, ஞாயிறு ஆகிய பள்ளி விடுமுறைகளில் மட்டுமே விஜய் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதுவே அவரது அரசியல் பிம்பத்தை தெளிவாக காட்டுகிறது" என்று அமைச்சர் ரகுபதி தாக்கமிக்க குரலில் தெரிவித்துள்ளார்.