தேன்கூட்டில் கல் வீசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று உலக நாடுகள் இந்த பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியா மீது அதிகமாக வரி விதித்து, நெருக்கடி கொடுத்து வருகிறது அமெரிக்கா. இதற்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பை ட்ரம்ப் சந்தித்து வருகிறார். இது அநியாயம் என்று ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. ஒரு கட்டத்தில், இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டேன் என்று ட்ரம்ப் புலம்பவும் துவங்கினார்.
இந்நிலையில் இன்று இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் நேற்றிரவு டில்லி வந்துள்ளனர். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 சுற்றுக்கள் முடிந்த நிலையில், விவசாயம் மற்றும் பால்பண்ணைத் துறையில் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.
ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைபட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடியும், இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணிபுரிந்து வருகின்றன எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டு இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெற இருப்பதாக வர்த்தகத்துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில், தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மட்டத்தில் என பல வகைகளில் நடைபெற்று வருவதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய சார்பில், வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கலந்து கொள்கிறார்.இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அரசு சார்பில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினர் நேற்று டெல்லி வந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?