சென்னையில் திடீர் பதற்றம்..! கவர்னர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Top Tamil News September 18, 2025 03:48 PM

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், கவர்னர் மாளிகையிலும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்க போகிறது என்று டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம கடிதம் ஒன்று வந்தது.உடனடியாக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், கவர்னர் மாளிகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்பநாயுடன் சோதனை நடத்தினார்கள்.

 

3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதம், மிரட்டல் கடிதம் என்று தெரியவந்தது. இதுபோல பலமுறை இ-மெயில் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் கடிதம் வந்தவண்ணம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், கவர்னர் மாளிகைக்கும் இதுபோல பலமுறை வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது.

சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள். இ-மெயில் மிரட்டல் கடிதங்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால் போலீசாரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.