தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.
நாடு முழுவதும் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும், ரேபிஸ் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் நாய்களை காப்பகத்தில் அடைக்க இடப்பட்ட உத்தரவிற்கும் நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மாநிலங்களில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் நாய்க்கடி சம்பவங்கள் குறித்து உத்தர பிரதேச அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தெரு நாய் ஒன்று எந்த தூண்டுதலும் இன்றி மனிதர்களை கடித்தால், முதல்முறை கடிக்கும்போது 10 நாட்கள் காப்பகத்தில் அடைக்கப்படும். அதற்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு விடுவிக்கப்படும். அதற்கு பிறகு வெளியே செல்லும் நாய் மீண்டும் யாரையாவது கடித்தால் அது ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதுபோல நாய் வளர்க்க லைசென்ஸ் பெறுபவர்கள் அதை கடைசி வரை கைவிடாமல் வளர்ப்பதற்கான பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K