சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி.!!
Seithipunal Tamil September 18, 2025 03:48 PM

தமிழகத்தின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெடி விபத்து சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகிறது. 

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.