ரோப் வே-யில் குழந்தைகளுடன் செல்ல முயன்ற தந்தை… திடீரென இயந்திரம் இடிந்து விழுந்து… “Final destination” பட பாணியில் நடந்த விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
SeithiSolai Tamil September 16, 2025 03:48 PM

சமூக வலைதளங்களில் தற்போது அதிரடியாக பரவி வரும் வீடியோ ஒன்று நெஞ்சை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது. ஒரு ரோப் வே மையத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காட்சிகள் இதுவரை எங்கு நடந்ததென்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், அந்த தருணம் “Final Destination” சினிமாவை போல இருந்தது.

 

பார்ப்பவர்களை பரிதவிக்கவைக்கும் இந்த வீடியோ, “ஒரு நிமிடம் தாமதமாயிருந்தால் பல உயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும்” என பலரும் கூறுகிறார்கள். வீடியோவில், ஒரு குடும்பம் ரோப் வே பயணத்துக்குத் தயாராகக் காத்திருக்கிறது. ஊழியர் டிக்கெட் சரிபார்த்து, முதன்முதலில் ஒருவரை அனுப்புகிறார்.

ஆனால் அவர் உள்ளே நடந்தவுடன், ரோப் வே இயந்திரம் திடீரென சிதறி உடைந்து விழுகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த பயணியை ஊழியர் பிடித்து இழுத்து உயிரைக் காப்பாற்றுகிறார். அதே நேரத்தில், குடும்பத்தில் இருந்த மற்ற குழந்தைகள் உட்பட யாருக்கும் பாதிப்பு இல்லாமல் எச்சரிக்கையுடன் மீட்கப்பட்டனர்.

இந்த வீடியோவை பார்த்தவுடன் நெட்டிசன்கள் பலவிதமான உணர்வுகளை பகிர்ந்து வருகின்றனர். “இது ஹாலிவுட் திகில் படத்திலிருக்கும் சீன் மாதிரி!”, “உயிர் பிழைத்ததற்கு நன்றி சொல்ல வேண்டியது அந்த ஊழியருக்கு தான்” என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் “இந்த வீடியோ பார்த்ததிலிருந்தே ரோப் வே- யில் போக பயமாக இருக்கு” எனவும் பதிவிட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.