காட்டின் உலகம், மனித சமுதாயத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு வாழ்வு அல்லது மரணம் என்பது ஒவ்வொரு நொடியும் நடைபெறும் போராட்டமாகவே உள்ளது. இந்த வன உலகில் வலிமை மற்றும் புத்திசாலித்தனம் மட்டுமே உயிர்வாழ்வதற்கான நிபந்தனைகள். அப்படிப்பட்ட ஒரு வன காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. @TheeDarkCircle என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு சிங்கம் காட்டு எருமைகளை வேட்டையாடும் திகிலூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில், ஒரு சிங்கம் இரண்டு எருமைகளை பின்தொடர்வது தெரிகிறது. அவற்றில் ஒன்று ஓடி தப்பிக்க முயற்சிக்கிறது, ஆனால் மற்றொன்று, அதிரடியான தைரியத்துடன் சிங்கத்தின் எதிரே நின்று எதிர்க்கிறது. சில நிமிடங்கள் அந்த தைரியத்தால் பின்னடைந்த சிங்கம், எருமை சில அடிகள் முன்னேறியவுடன் அதனை எதிர்பாராத வகையில் பின்னால் இருந்து தாக்குகிறது. இதையடுத்து, இன்னொரு சிங்கம் களத்தில் சேர்ந்து, எருமையின் கழுத்தைப் பிடித்து அதனை முழுமையாக கட்டுப்படுத்துகிறது. தப்பிக்க முடியாத நிலையில் சிக்கிய எருமை, இறுதியில் சிங்கங்களின் இரையாகவே முடிகிறது.
வெறும் 38 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது 2.76 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வைகளை பெற்று, நூற்றுக்கணக்கான லைக்குகளையும், கருத்துகளையும் பெற்றுள்ளது. இதுகுறித்து பல சமூக ஊடக பயனர்கள், “வனத்தின் இயற்கை சட்டம் இது”, “தைரியம் மட்டுமின்றி சூழ்நிலைக்கும் பங்களிப்பு வேண்டும்”, போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ, காட்டில் உயிர்வாழ்வது எவ்வளவு கடுமையானது என்பதை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. மேலும் தைரியத்தோடு சிங்கத்துக்கு எதிராக நின்ற எருமையின் முயற்சி பாராட்டப்படத்தக்கதுதானாக இருந்தாலும், காட்டின் சுருங்கிய விதி: வலிமையானவனே உயிர்வாள்வான் என்பதையே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.