பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதால் டெல்லியில் உள்ள கூட்டணி தலைவர்களை சந்திப்பார்கள்.இதில் டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி செல்வது கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “அதிமுக உட்கட்சி பிரச்சனையில் கருத்து சொல்வது சரியானது அல்ல. பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதால் டெல்லியில் உள்ள கூட்டணி தலைவர்களை சந்திப்பார்கள்.இதில் டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி செல்வது கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. திருச்சியில் நடந்த சிறுநீரக திருட்டை பற்றி விஜய் பேசவில்லை. நாமக்கலில் நடந்த சம்பவத்தை பற்றி தான் பேசினார். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பது பற்றி இதயத்தில் இருந்து வர வேண்டும். எழுதி தருவதை பேசுவது எப்படி?சம்பந்தமில்லாத டிரம்ப்பிடம் எழுதி தந்ததால் கூட தமிழ்நாட்டில் இது பிரச்சனை என்று பேசிவிட்டு செல்வார்.
அண்ணா 1949ல் கட்சியை ஆரம்பித்து கஷ்டப்பட்டு 67ல் ஆட்சியை பிடித்தார். அவரது ஆட்சியில் குறை சொல்ல எதுவும் இல்லை. ஆனால் அவர் வந்த பின்னர் தமிழர்களின் வரலாறு, இலக்கியம் எல்லாம் அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. அண்ணா மீதான் நன்மதிப்பு மக்களுக்கு என்று மாறாது. அண்ணாவை குறை சொல்ல முடியாது. அண்ணா யார் என்று அரை மணி நேரம் பேச முடியுமா? தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் மையம் செய்தவர் எம்.ஜி.ஆர்.தான். பயிற்று மொழியாக தமிழை மாற்றி ஆங்கிலமாக்கியவரும் எம்.ஜி.ஆர். தான். முல்லை பெரியாறு அணைகளை பாதுகாக்கும் உரிமையை கேரளாவிற்கு தந்தவரும் எம்.ஜி.ஆர். தான். அண்ணனுக்கு ஒரு தந்தை போல் இருந்து விடுதலைக்கு உதவியதால் அவர் மீது நன்மதிப்பு உண்டு என்பதால் மதிக்கிறோம். நானும் சினிமாவில் நடித்தேன். ரசிகர்களை சந்தித்தேனா? விஜய் நடித்து ரசிகர்களை சந்தித்தாரா? நான் மக்களை சந்தித்தேன். 2026ம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பு கிடையாது. வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன்” என்றார்.