கடன் பிரச்சனை... விஷம் குடித்த பள்ளி மாணவி மருத்துவமனையில் அனுமதி!
Dinamaalai September 16, 2025 08:48 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் தாயின் கடன் பிரச்சனையால் பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி, பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (45), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆன்சி (43),  இத்தம்பதியின் 12 வயதான மகள்  தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்ப பிரச்னை காரணமாக கணவர் ராஜா தனியாக வசித்து வரும் நிலையில்,  ஆன்சி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் பாத்திமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள்.

ஆன்சி கடந்த சில  வருடங்களுக்கு முன்பு உறவினர்கள் உட்பட சில நபர்களிடம் லட்சக் கணக்கில் பணம் வாங்கி கூடுதலாக வட்டி தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் வட்டிக்கு கொடுத்த உறவினர்கள் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த ஆன்சி-யின் உடன் பிறந்த தம்பியான அண்டோ என்பவரும் பணத்தைக் கேட்டு வற்புறுத்தினாராம். 

அண்டோ-விடம் ஆறு லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், இவர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு 22 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளாராம். மேலும் ஆன்சி-யின் கணவர் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆன்சி இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், தெற்கு காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளார். 

மேலும், கடந்த ஒரு வார காலமாக ஆன்சியை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளாராம். இந்த நிலையில், நேற்று மாலை ஆன்சி தற்கொலை செய்வதற்காக பூச்சி மருந்து வாங்கி வீட்டில் வைத்துள்ளார். பின்னர் அருகே உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அங்கு ஆன்சி-யின் மகள் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். 

பின்னர் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழுந்திருக்காத நிலையில், அவர் பூச்சி மருந்தை குடித்தது பின்னர் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த ஆன்சி மற்றும் அக்கம்பக்கத்தினர்  உடனடியாக சிறுமியை  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.  தற்போது சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இது குறித்து ஆன்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, எனது தம்பி அண்டோ ஒரு வார காலமாக பணம் கேட்டு மிரட்டி வருகின்றார். இதனால் நான் தற்கொலை செய்ய இருந்த நிலையில் எனது மகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்பு இரண்டு தடவை தூக்க மாத்திரைகள் உட்கொண்டு நானும் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். 

இனி என்னால் உயிர் வாழ முடியாது என்று  நினைத்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியுருந்தேன். ஆனால் எனது மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இனியும் காவல்துறை வேடிக்கை பார்த்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. ஆகவே காவல்துறை உடனடியாக எனது தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.