2025 டி20 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர்-4 சுற்றில் இந்திய அணியின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 15ம் தேதியான நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) சூப்பர்-4க்கு தகுதி பெற்றது. அபுதாபி மைதானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓமானை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஓமன் அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் சூப்பர்-4க்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. குரூப் ஏ-யில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி 2 வெற்றிகளுக்குப் பிறகு 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது, பின்னர் பரம எதிரியான பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குரூப் கட்டத்தின் கடைசி போட்டியில் இந்தியா 2025 செப்டம்பர் 19ம் தேதி ஓமானை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது.
வெளியேறும் அபாயத்தில் பாகிஸ்தான்:2025 ஆசியக் கோப்பையில் தங்கள் குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் -4க்கு தகுதி பெறும். இந்தியா ஒரு இடத்தை உறுதி செய்த பிறகு, இப்போது குரூப் A-வில் இருந்து ஒரு அணி மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழையும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் குரூப் நிலையின் கடைசி போட்டியை ஒருவருக்கொருவர் எதிர்த்து விளையாடவுள்ளனர். இந்த போட்டி 2025 செப்டம்பர் 17ம் தேதி துபாயில் நடைபெறும். இந்தியா தனது கடைசி குரூப் போட்டியில் ஓமானை தோற்கடித்தால், பாகிஸ்தானுக்கு எதிரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெற்றி அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
ALSO READ: இது எங்களுக்கு அவமானம்! இந்திய அணிக்கு எதிராக புகார்.. ஐசிசியிடம் சென்ற பாகிஸ்தான் அணி!
குரூப் ஏ வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் தற்போது தலா 2 புள்ளிகளைக் கொண்டுள்ளன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகள் கிடைக்கும். குரூப் ஏ அட்டவணையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் நிகர ரன் விகிதம் சிறப்பாக உள்ளது.
கலக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்:ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொடக்க ஆட்டக்காரர் அலிஷான் ஷரஃபு மற்றும் கேப்டன் முகமது வாசிம் ஆகியோர் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். இருவரும் அரை சதம் அடித்தனர். வாசிம் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில், ஷரஃபு 38 பந்துகளில் 51 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் யுஏஇ 5 விக்கெட்டுகளுக்கு 172 ரன்கள் எடுத்தது. அலிஷான் போட்டியின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ALSO READ: புறக்கணிக்கப்பட்ட பாகிஸ்தான்.. இந்திய அணி செய்தது சரியா? தவறா..? ஐசிசி அபராதம் விதிக்குமா?
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் தொடக்க ஆட்டக்காரர்களான அமீர் கலீம் (02) மற்றும் கேப்டன் ஜதிந்தர் சிங் (20) இருவரையும் சித்திக் வெளியேற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 23 ரன்களாகும். தொடர்ந்து, ஓமன் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஓமன் அணி 18.4 ஓவர்களில் 130 ரன்களுக்குச் சரிந்தது. யுஏஇ அணியில் அதிகபட்சமாக ஜுனைத் சித்திக் 23 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.