மீண்டும் ரெப்போ வட்டியை 0.25% குறைக்கும் RBI.. மோர்கன் ஸ்டான்லி சொன்ன குட் நியூஸ்!

முன்னணி தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், இந்திய மக்களுக்கு ஜிஎஸ்டி வட்டி குறைப்பிற்குப்பின், மீண்டும் பெரிய சர்ப்ரைஸை ரிசர்வ் வங்கி வெளியிடும் எனக் கூறியுள்ளது. இந்த முறை இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 0.25% அதாவது ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் ரெப்போ வட்டியை குறைக்கும் எனக் கூறியுள்ளது.
இந்த முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கக்கூடும் என்று மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையை நிறுவனம் செப்டம்பர் 15 திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பது பணவீக்கத்தைக் குறைக்கக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது, அதாவது நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) குறைக்கும் முயற்சி என தரகு நிறுவனம் கூறியுள்ளது.
அப்படி செய்தால் 2025-26 நிதியாண்டில் பணவீக்கம் ஆண்டுக்கு 2.4% ஆக இருக்கக்கூடும். எனவே, ரிசர்வ் வங்கி அக்டோபரில் ரெப்போ விகிதத்தை 0.25% ஆகவும், டிசம்பரில் 0.25% ஆகவும் குறைக்கக்கூடும் என்று அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
நாட்டின் மத்திய வங்கி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாத இடைவெளியில் பணவியல் குழு கூட்டத்தை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் பிற நிதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால் அனைவரின் பார்வையும் குறிப்பாக ரெப்போ விகிதத்தின் மீதுதான் உள்ளது. ஏனெனில் ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றம் சாமானிய மக்களின் பணத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
ரெப்போ விகிதத்தின் உதவியுடன், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இது ஒரு வணிக வங்கி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறும் விகிதமாகும். இந்தக் கடன் குறுகிய காலத்திற்கு மட்டுமே.
ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட பிறகு, கடன் சுமை குறையும். அதே நேரத்தில், ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் வட்டி விகிதம் குறையலாம். அடுத்த மாதம், அதாவது அக்டோபரில் ரிசர்வ் வங்கியால் பணவியல் குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். இந்தக் கூட்டத்தின் போது, ரெப்போ விகிதத்துடன் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதனால் இந்த முறை வட்டி குறைக்கப்பட்டால் EMI செலுத்தும் கட்டணம் குறையும்.