காட்டின் இயற்கை உலகம் சாகசத்தாலும் ஆபத்தாலும் நிரம்பிய ஒன்று. அங்கு ஒவ்வொரு நாளும் வாழ்வதா? மரணமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உயிரினங்கள் தங்களுக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் வகையில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு பாம்பு சண்டை வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், இரண்டு ஆபத்தான பாம்புகள் – விஷமுள்ள ராஜநாகம் மற்றும் பெரிய மலைப்பாம்பு – நேருக்கு நேர் மோதும் மரணப்போரில் ஈடுபடுகின்றன. பிரபல வனவிலங்கு கண்காணிப்பு பக்கம் ஒன்றான @Predatorvids எனும் எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த காணொளி, தற்போது 15,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
வீடியோவில் முதலில், ராஜநாகம் தனது நாவினாலும் வலிமையாலும் மலைப்பாம்பின் வாயைப் பிடித்திருப்பதைக் காணலாம். ஒருவேளை நாகம் வெல்லப்போகிறதோ என்று பார்வையாளர்கள் எதிர்பாரிக்கும் தருணத்தில், நிலமை திரும்பியதால் திகிலூட்டும் திருப்பம் ஏற்பட்டது.
மலைப்பாம்பு தனது ஒட்டுமொத்த உடல் வலிமையையும் பயன்படுத்தி, ராஜநாகத்தை தனது முதுகில் சுற்றி இறுக்கமாக பிடித்து, சுருட்டிவிட்டு மூச்சை அடக்க ஆரம்பிக்கிறது. பாம்புகளில் மிகவும் வலிமை மிக்கதாக அறியப்படும் மலைப்பாம்பு, இங்கு தனது வேட்டையாடும் தன்மையை காட்டிக்கொடுத்தது.
மேலும் வெறும் 35 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, ஆழமான அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறது. வெறும் சண்டை காட்சி மட்டுமல்ல; சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, கடைசி மூச்சுவரை போராடுபவனே இங்கு வெற்றி பெறுகிறான் என்பதையும் இந்த வீடியோ எடுத்துரைக்கிறது. “இவை போலி காட்சிகள் அல்ல, உண்மையான காட்டின் நியதிகள்!” எனக் கூறும் சமூக ஊடக பயனர்கள், இந்த வீடியோவின் கீழ் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இரண்டும் ஆபத்தான பாம்புகள் என்பதால், இத்தகைய மோதல் இயல்பில் அரிதானது என்றும், இது எங்கே நடந்தது என்பதைப் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.