விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் பாய்ந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக விஜய் நடத்திய முதல் மாநாட்டில் தன்னுடைய அரசியல் எதிரிகளை பெயர் சொல்லி அழைப்பதற்கு இவ்வளவு பயப்படுகிறாரே இவர் எப்படி அரசியல் செய்யப் போகிறார்? இவருக்கு எல்லாம் அரசியல் தேவைதானா? என்று பல விமர்சனங்கள் இவர் மீது எழுந்தது.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார் விஜய். அங்கு தனது அனல் பறக்கும் பேச்சால் அரசியல் எதிரிகளை கலங்கடித்தார். இம்முறை விஜயின் பேச்சு முக்கிய அரசியல் புள்ளிகளின் கவனத்தை ஈர்த்தது. இருந்த போதிலும் விஜய் மீது விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே அவரைத் தொடர்ந்து தாக்கி பேசிக்கொண்டு இருப்பவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஆரம்ப காலத்தில் விஜய் வரவேண்டும் என்றும் வந்த பிறகு என் தம்பி என் தம்பி என்று கொஞ்ச நாட்கள் கூவிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது விஜயை கண்டபடி விமர்சித்து வருகிறார். விஜய் சமீபத்தில் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் தொடங்கினார். அவரை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டங்கள் கூடியது. இதை விமர்சித்த சீமான் நடுரோட்டில் எந்த நடிகர் போனாலும் கூட்டம் வரத்தான் செய்யும் இதை விட அதிகமான கூட்டம் அஜித்துக்கும் நயன்தாராக்கும் வரும் என்று விஜய் சீண்டினார்.
இதற்கு விஜய் ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் தற்போது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சீமானை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில்,” விஜய்யை சீமான் எவ்வளவு திட்டினாலும் அவர் இடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்த சாக்கடையில் கால் வைக்காமல் தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறி பேச்சை விஜய் கண்டு கொள்ளவே கூடாது. 15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயசு பெருசு தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள்.”
”விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்பு வரை பாசம் பொழிந்த பச்சோந்தி தற்போது நிறம் மாறியுள்ளது. தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய ஒரு அதிதீய சக்தி இது”. என்று புரட்டி புரட்டி எடுத்துள்ளார். ரசிகர்களும் இவரின் பதிவுக்கு மக்களுக்கு பிடிச்ச ரிவ்யூ இதாயா என்றும் நீ ஜெயிச்சிட்ட மாறா என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.