திருவள்ளூர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், காரில் விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற ஓட்டுனர் சீனிவாசனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.
சீனிவாசன் பொதுமக்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு போலீசாருடன் செல்ல மறுத்துவிட்டார். சென்னையில் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை அதிவேகமாக ஓட்டி வந்து ஏற்பட்ட விபத்தில் 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய வேலப்பன்சாவடி சாய் ஸ்ரீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மதுரவாயல், ஆவடி காவல் நிலையங்களில் சாய் ஸ்ரீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?