சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மழை இன்றும், இரவு 7 மணி வரையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், திருச்சி, ஈரோடு, நாமக்கல், கோவை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை மற்றும் இடி மின்னலின் போது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவது நல்லது. அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்த்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva