கூமாபட்டி பிரபலம் தங்கப்பாண்டி மருத்துவமனையில் அனுமதி..!
Top Tamil News September 17, 2025 10:48 AM

சமீபத்தில் திடீரென்று இணையதளங்களில் டிரெண்டானது கூமாபட்டி.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கூமாபட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தை பிரபலமாக்கியவர் தங்கபாண்டி. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் அவர் தனது கிராமம் குறித்த வீடியோவை பதிவிட்டு ‛ஏங்க கூமாபட்டிக்கு வாங்க..' என சொல்லி சொல்லி ஊரை பிரபலமாக்கினார்.

தற்போது தங்கபாண்டியன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை முடித்து கொண்டு தங்கபாண்டி பஸ்சில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் சென்றது.

அப்போது திடீரென்று பிரேக் போடப்பட்டது. தங்கபாண்டி அதனை எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் பஸ்சின் முன்புறம் போய் கதவில் மோதினார். அவரது தோள்பட்டையில் கதவு பலமாக இடித்தது. இதில் தங்கபாண்டியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணன்கோவில் அருகே பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால்கதவில் மோதி தங்கப்பாண்டிக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.