வருமான வரி கணக்கு தாக்கலுக்கு கூடுதல் அவகாசம்! எத்தனை நாள்?
WEBDUNIA TAMIL September 17, 2025 10:48 AM

இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு வரி செலுத்துவோருக்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான இணையதளம் கடைசி நாளில் முடங்கியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15, அன்று, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் இணையதளத்தை பயன்படுத்தியதால், அது சரியாக செயல்படவில்லை. இதனால், வரி செலுத்துபவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு செப்டம்பர் 16, அதாவது இன்று ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

இதுவரை 7.30 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே தங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனவர்களுக்கு இந்த ஒரு நாள் கூடுதல் அவகாசம் ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.