சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, காட்டில் நடக்கும் விலங்குகளின் வேட்டையின் தாக்கத்தையும், அதிலுள்ள திருப்பங்களையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. வேட்டைக்கார விலங்குகள் இரையைப் பிடிக்க முயற்சிக்க, இறுதியில் காட்டின் ராஜாவான சிங்கம் வருகையால் களம் முற்றிலும் மாற்றமடைகிறது. இந்தக் காணொளி @Predatorvids என்ற X கணக்கில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. சுமார் ஒரு நிமிடம் நீளமுள்ள இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் முதலில், ஒரு சிறுத்தை ஒரு மானை வேட்டையாடி கொண்டுவரும் காட்சி இடம்பெறுகிறது. ஆனால் அதற்கிடையில் காட்டு நாய்களின் கூட்டம் அங்கு வந்து விடுகிறது. தனி சிறுத்தை உயிர் காக்க மரத்தில் ஏறி ஒளிகிறது, மான் ஒரு வாய்ப்பு பார்த்து ஓட முயற்சிக்கிறது. ஆனால் காட்டு நாய்கள் அதைக் தாக்குவது போலத் தெரிகிறது. இந்நேரம் திடீரென ஹைனாக்கள் (hyenas) களத்தில் குதிக்கின்றன. இதில் காட்டு நாய்கள் பின்னடைகின்றன. ஹைனாக்கள் மானைப் பிடித்து, கொள்கின்றன.
இதிலிருந்து ஒரு பக்கமாக, சிங்கம் ஒன்று அந்த இடத்தில் நுழைகிறது. அதன் வருகை மற்ற எல்லா விலங்குகளுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. கோபமுடன் சிங்கம் கழுதைப்புலிகளை தாக்கி, அவற்றில் ஒன்றை பிடிக்கிறது. இதையெல்லாம் காணும் சுற்றுலாப் பயணிகள், அந்த தருணங்களை தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இது காட்டின் உண்மையான விலங்குகள் உலகம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர், “இது போலி வீடியோவாக இருக்கலாம்” என்றும், “இரு வெவ்வேறு சம்பவங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது” என்றும் கூறியுள்ளனர். மேலும் இயற்கையின் தனித்துவம் என்னவெனில், எப்போதும் வேட்டைக்காரனே வெற்றி பெறுவான் என்று உறுதி இல்லை. ஒருவேளை இறுதியில் வலிமை, தருணம், தைரியம் தான் முடிவை தீர்மானிக்கின்றன என்பதை இந்த வீடியோ நன்கு நிரூபிக்கிறது.