“வெட்கமே இல்லையா..!”… எலக்ட்ரானிக் கடையில் டிவியை டி-ஷர்டில் மறைத்து திருட முயன்ற நபர்… வைரலாகும் விசித்திரமான வீடியோ..!!!!
SeithiSolai Tamil September 18, 2025 12:48 AM

ஆஸ்திரேலியாவின் வைஹல்லா நகரத்தில் உள்ள மின்னணு பொருட்கள் கடையில், ஒரு நபர் பெரிய அளவிலான டெலிவிஷன் பெட்டியை தனது டி-ஷர்ட்டுக்குள் மறைத்து திருட முயன்ற சம்பவம் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும், சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 16, 2025 அன்று நடந்த இந்த சம்பவத்தில், அந்த நபர் டெலிவிஷனை தனது ஆடைக்குள் திணித்து, எதுவுமே நடக்காதது போல் கடையை விட்டு வெளியேற முயன்றார், ஆனால் அவரால் பொருளை மறைக்க முடியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by 7NEWS Adelaide (@7newsadelaide)

வீடியோவில், அந்த நபர் கடையில் நடந்து செல்லும் போது, டெலிவிஷன் பெட்டியை டி-ஷர்ட்டுக்குள் திணிக்கும் காட்சி தெளிவாகத் தெரிகிறது. கடை ஊழியர்களின் பார்வையில் இருந்து தப்பிக்க முயன்று, அவர் வெளியேற முயற்சித்தார்.

இந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “வெட்கமின்றி டி.வி.யை டி-ஷர்ட்டுக்குள் மறைத்து கடையை விட்டு வெளியேறிய திருடன்” என குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ 427,000 பார்வைகளையும், 7,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது வரை அவரது கைது குறித்தோ அல்லது காவல்துறை விசாரணை குறித்தோ எந்த தகவலும் இல்லை. கடை நிர்வாகம் டெலிவிஷனை திருப்பித் தருமாறு கோரி இந்த வீடியோவை பதிவிட்டதாக தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.