குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால் நேரும் அதிசயம்
Top Tamil News September 18, 2025 09:48 AM

பொதுவாக குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்களுக்கு நம்ம ஊரில் சாப்பிட கொடுப்பதுண்டு .இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது பிறக்கும் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்கும் என்பதுதான் .ஆனால் அது மட்டுமல்லாமல் குங்குமப்பூவை பல வடிவத்தில் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நமக்கு உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலில் இட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். 
2.குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து, குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க  உதவும் 
3.தினமும் 1/2 கிராம் அளவு குங்குமப்பூவை , 1 டம்ளர் பாலில் கலந்து உண்டால் பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும், குருதியிழப்பை சரிகட்டலாம் . 
4.மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும், தினமும் 1/2 கிராம் அளவு,குங்குமப்பூவை  1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது. 
5.அடுத்து குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி, படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால், ஜீரண சக்தி அதிகரித்து, நன்கு பசியைக் கொடுக்கும். 
6.அதுமட்டுமல்லாமல் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால், தாது விருத்தியாகும்; 
7.குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். 
8.குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமாகும்; 
9.குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால் ரத்தச் சோகை நீங்கும். 
10..மேலும் கருவுற்ற பெண்களை சளி, இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்து.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.