மும்பை மீரா-பயந்தர் பகுதியில் உள்ள மாதோஸ்ரீ இந்திராபாய் பாபுராவ் சர்நாயக் கேஷ்லெஸ் எம்.பி.எம்.சி மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஒரு இதய நோயாளியிடம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர் கடுமையான முறையில் பதிலளிக்கும் காட்சி வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த 22 வினாடிகள் கொண்ட வீடியோ X தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பரவலான கோபத்தையும் எதிர்வினையையும் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் ஒரு வயதான நோயாளி, “நான் இறந்து கொண்டிருக்கிறேன்” என மருத்துவர்களிடம் கெஞ்சுகிறார். இதற்கு பதிலளிக்கும் பெண் மருத்துவர், “அப்படியானால் கீழே சென்று அவரிடம் பேசுங்கள்” என அலட்சியமாக கூறுகிறார்.
நோயாளி, “நான் ஏற்கனவே மருத்துவமனை ஊழியர்களிடம் பேசியிருக்கிறேன்” என விளக்க முயற்சிக்க, அந்த மருத்துவர் மேலும் குரலை உயர்த்தி, “நான் உங்களை டிஸ்சார்ஜ் செய்ய சொல்கிறேன்… பிறகு போய்விடுங்கள்!” என கடுமையாக பதிலளிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், “நீ ஏன் என்னிடம் சொல்கிறாய்? பயமுறுத்தச் சொல்கிறாயா? நான் ஏன் பயப்பட வேண்டும்?” என நோயாளியிடம் விமர்சனமாக கேட்பது வீடியோவில் தெளிவாகக் கேட்கப்படுகிறது.
இந்த வீடியோ வைரலானதுடன், மருத்துவரின் நடத்தை குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். “இத்தகைய மருத்துவர் ஒருவர் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்,” என ஒரு பயனர் எழுதினார்.
மேலும் பல பயனர்கள் இது தொடர்பாக தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் இடையில் இந்த சம்பவத்திற்கு இதுவரை எடுக்கப்பட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.