'இனி முகமூடியார் பழனிசாமி என அழைக்கனும்' டிடிவி தினகரன் விமர்சனம்!
TV9 Tamil News September 18, 2025 01:48 PM

சென்னை, செப்டம்பர் 17 :   அதிமுக பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அவர் விமர்சித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. 2025 ஏப்ரல் மாதத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்தது. இதனை அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அமித் ஷா வியூகம் அமைத்து வருகிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அண்மையில் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இதனை அடுத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகிலா ஆகியோரை கட்சியில் சேர்க்க செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளதகா கூறப்படுகிறது. இதற்கிடையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகியவை வெளியேறியதாலும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 2026 செப்டம்பர் 16ஆம் தேதியான நேற்று எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றார்.  அவருடன் கட்சியின் முத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமுணி ஆகியோர் வந்தனர்.

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.  மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக கூட்டணி எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்தும், தேர்தல் பரப்புரையை தலைவர்கள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் அவர் எந்தவித போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல் கைகுட்டையால் தனது முகத்தை மூடியபடி காரில் சென்றதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக் கொண்டு சென்றது குறித்து அமமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Also Read : செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா உடனான சந்திப்பில் என்ன நடந்தது?

‘இனி முகமூடி பழனிசாமி என அழைக்கனும்’

சென்னையில் பேட்டி அளித்த அவர், “டெல்லிக்கு செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து விட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன எனவும் அரசியலின் இதுபோல் நடந்து உள்ளதா எந்த கட்சி தலைவராவது டெல்லிக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விட்டு வரும்போது முகத்தை மூடிக்கொண்டு ஓடி வருவதை பார்த்து இருக்கிறீர்களா?

Also Read : விஜய்க்கு கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..

யார் முகத்தை மூடிக்கொண்டு வருவார்கள் என உங்களுக்கு தெரியும். ஊடகங்கள் மூலமாகத்தான் நானும் பார்த்துக் கொண்டேன் அவரும் அவரது அன்பு மகன் இருவரும் பழனிச்சாமி தான் பதில் சொல்ல வேண்டும். மன்னர்கள் சாதனை செய்தால் இன்று முதல் சாதனை மன்னர் என அழைக்க வேண்டும் . அது போல அண்ணன் பழனிசாமியை முகமூடி பழனிச்சாமி என அழைக்க வேண்டும். எப்போதும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்க முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. 2026 தேர்தலுக்குப் பிறகு உண்மையாகவே நடுரோட்டில் நிற்கப் போகிறார் என்பது நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” என தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.