சென்னை வானிலை ஆய்வு மையம்,'தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. அதேசமயம் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இந்த இரட்டைச் சுழற்சிகளின் தாக்கத்தால், தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பொழியும்' என அறிவித்திருந்தது.
இதனிடையே, இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பொழிவு நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தேனி திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், வேலூர், தருமபுரி, கோயம்புத்தூர், தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்து, லேசான மழை பொழியும் வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.