விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாத்தூர் அருகே திவ்யா பட்டாசு சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்த இடத்தில் மழை பெய்து வரும் நிலையில் கொட்டும் மழையிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் காயமடைந்த 4 பேரில் 2 பேருக்கு 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.