கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி இதுவரை 71 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு இந்த அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் ஆகிய பகுதிகளில் இந்த நோய் பரவியுள்ளது.
இந்த அமீபா மாசுபட்ட நீரில் இருந்து மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து, அங்கு திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
மாசுபட்ட நீரில் குளிப்பது அல்லது முகத்தைக் கழுவுவது போன்றவற்றால் இந்த நோய் பரவுகிறது. இதனால், காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மருத்துவமனைகள் இதற்காக உஷார்படுத்தப்பட்டுள்ளன. கேரள அரசு இந்த நோயை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.