சென்னை மேற்கு மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அவரிடம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கூறி, சிலர் நேரடியாக வீட்டிற்கே சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டனர்.
இந்த வழக்கில் மாவட்ட தவெக இணை செயலாளர் இளங்கோ உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளங்கோவுக்கு முன்னர் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்பு உள்ளதாகவும், அவருக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் மாவட்ட தவெக அமைப்பினுள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.