கோவைக்காயுடன் கத்திரிக்காய் சேர்த்து சாப்பிட எந்த நோய் ஓடி போகும் தெரியுமா ?
Top Tamil News September 18, 2025 10:48 AM

பொதுவாக  கோவைக்காயை நாம் உணவில் பல்வேறு வடிவங்களில் சேர்த்து கொண்டால் பல்வேறு நோய்களை குணமாக்கலாம் .அதிக மசாலா உணவுகளை சேர்த்து கொள்வதால் நம் வயிற்றில் சேரும் கழிவுகளை கோவக்காய் மூலம் விரட்டலாம் .மேலும் கோவைக்காயுடன் கத்திரிக்காய் சேர்த்து சாப்பிட கிட்னி கல் பிரச்சினை தீரும் .மேலும் இந்த காயின் நன்மைகளை பார்க்கலாம்

1.கோவைக்காயில், சாம்பார், கூட்டு போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண்,குணமாகும் 
2.நம் உணவில் கோவைக்காயை அதிகம் சேர்க்க வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்
3.கோவைக்காய் இலைச் சாறு 20மிலி உடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும் குடித்து வர வேண்டும்.
4. மேற்கூறிய படி 7 நாட்கள் வரை சாப்பிட வெட்டை நோய் மாயமாய் மறைந்து போகும் .
5.கோவைக்காய் இலைச் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகப் பூச வேண்டும். 
6.மேலும் ஒரு பிடி இலையை ஒன்றிரண்டாக நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். 
7.சிலருக்கு சொறி சிரங்கு இருக்கும் .அவர்கள் மேற்கூறிய படி 7 நாட்களுக்கு காலை, மாலை வேளைகளில் இவ்வாறு செய்து வர படை, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.
8.இந்த கோவைக்காய் இலைச் சாறு, காலை, மாலை 50 மிலி அளவு 4 நாள்கள் குடித்து வர சீத பேதி மாயமாய் மறைந்து போக வாய்ப்புள்ளது .
9.சிலருக்கு ஆஸ்த்மா இருக்கும் .கோவைக்காய் வேர்க்கிழங்கு சாறு 10 மிலி காலையில் மட்டும் குடித்து வர ஆஸ்துமா குணமாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.