சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றதில் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதி என்.செந்தில்குமார் 1970ம் ஆண்டு பிறந்தார். சென்னையில் உள்ள ரெயில்வே பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, சேலம் மத்திய சட்டக்கல்லூரியிலும் சட்டப்படிப்பை முடித்தார். 1994-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரத்திடம் ஜூனியராக சேர்ந்தார்.
கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி சிறந்த வக்கீலாக திகழ்ந்த இவர், 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் அரசு பிளீடராகவும், அதன் பின்னர் மத்திய அரசு வக்கீலாகவும் பணியாற்றினார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார்.
அதேபோல நீதிபதி ஜி.அருள் முருகன், 1976-ம் ஆண்டு மே 27-ந்தேதி தர்மபுரி மாவட்டம் அரூரில் பிறந்தார். சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 1999-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். மூத்த வக்கீல் கே.துரைசாமியிடம் ஜூனியராக 2002-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
அதன்பின்னர், சிவில், கிரிமினல் என்று அனைத்து வழக்குகளிலும் ஆஜராகி திறம்பட வாதாடினார். கடந்த ஆண்டு ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?