இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு செயல்முறையை மேம்படுத்தும் நோக்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி வாக்குச்சீட்டில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இனி, வேட்பாளர்களின் புகைப்படங்கள் கறுப்பு-வெள்ளை நிறத்திற்கு பதிலாக வண்ணத்தில் அச்சிடப்படும்.
வாக்காளர்கள் தெளிவாக பார்க்கும்படி, புகைப்படம் ஒதுக்கப்பட்ட இடத்தில் முக்கால் பங்கு அளவிற்கு வேட்பாளரின் முகம் தெளிவாக தெரியும்.
வேட்பாளரின் வரிசை எண், இந்திய எண்களின் சர்வதேச வடிவத்தில், பெரிய மற்றும் தடித்த எழுத்துக்களில் அச்சிடப்படும்.
வாக்குச்சீட்டுகள் 70 GSM தாளில் அச்சிடப்படும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு குறிப்பிட்ட RGB மதிப்புகளுடன் கூடிய இளஞ்சிவப்பு நிறத் தாள் பயன்படுத்தப்படும்.
இந்த மாற்றங்கள், வாக்காளர்களுக்கு எளிதாகவும், குழப்பம் இல்லாமலும் வாக்களிக்க உதவும். கடந்த ஆறு மாதங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சில சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று என்ப்து குறிப்பிடத்தக்கது,
Edited by Siva