பழங்கள் மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் இயற்கை மருந்தாக கருதப்படுகின்றன. அதில் குறிப்பாக அன்னாசிப்பழம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
அன்னாசிப்பழத்தின் மருத்துவ குணங்கள்அன்னாசியில் மாங்கனீஸ் அதிகமாக உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. 165 கிராம் அன்னாசியில் நாளொன்றுக்கு தேவையான மாங்கனீஸின் 76% உள்ளது. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. இதனால் அன்றாட உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய இது சிறந்த தீர்வாகும்.
இதையும் படிங்க: சருமம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் முள்ளங்கி..! இதில் இவ்வளவு நன்மைகளா?!
செரிமானம் மற்றும் அழற்சி குறைப்புஅன்னாசியில் உள்ள ரோமிலைன் (Bromelain) நொதி அழற்சியை குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
அன்னாசிப்பழம் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ரால் மட்டத்தையும் சமநிலைப்படுத்துகின்றன.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்அன்னாசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து, ஃப்ரீ ரேடிக்கல்களின் தாக்கத்தை தடுத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன. மேலும் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருந்து சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன.
எல்லா வயதினருக்கும் உகந்த அன்னாசிப்பழம், சுவையிலும் ஆரோக்கியத்திலும் முன்னணியில் உள்ளது. எனவே தினசரி உணவில் இதனைச் சேர்த்துக் கொள்வது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த வழி ஆகும்.
இதையும் படிங்க: வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?