சின்னத்திரையின் மூலம் குறிப்பாக விஜய் தொகைக்காட்சியின் ஸ்டேண்டப் காமெடி மூலம் புகழ்பெற்றவர் நடிகர் ரோபோ சங்கர்.
அதுமட்டுமின்றி உலகமெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள நடத்தி வந்தார். குறிப்பாக இவ விஜயகாந்த் போன்று செய்வது அனைவராலும் ரசிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுக்ளுக்கு முன்பே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படு சிகிச்சை எடுத்து வந்தார். பின்னர் உடல் நலம் தேறி ஆனால் மெலிந்த தேகத்தோடு காணப்பட்டார். இதனால் அவர் பல படவாய்ப்புகளை தவிர்த்தார். பின்னர் உடல் நலம் தேறி தற்போதுதன் நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் படப்பிடிப்புத் தளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். அது ரசிகர்கள் பலராலும் ரசிக்கப்பட்டது.இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்புத் தளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
சின்னத்திரையை அடுத்து பெரியத் திரையிலும் பல படங்களில் நடித்தார். குறிப்பாக தனுஷுடன் மாரி 2, வேலனு வந்துட்டா வெள்ளைக்காரன், இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வேலைக்காரன் மற்றும் விஸ்வாசம் போன்றவை முக்கிய படங்களாகும். குறிப்பாக வேலனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் இவரது காமெடி காட்சிகள் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
ரோபோ சங்கர் முதல் படம் கேப்டன் விஜயகாந்த் நடித்த தர்ம சக்கரம் ஆகும். இதில் அவர் துணை நடிகராக ஒரு சில காட்சிகள் வந்து செல்வார். ஆனால் அவருக்கென்று பெயர் சொல்லக்குடிய கேரக்டர் இதற்குதானே ஆசைபட்டாய் பால குமாரா படத்தில் அமைந்தது. இதையடுத்து அவர் பல படங்களில் நடித்து வந்தார்.