பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார்.அந்தவகையில் 02.08.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் முதற்கட்டமாக 02.08.2025 அன்று சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், இரண்டாம் கட்டமாக 23.08.2025 அன்று ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நான்காம் கட்டமாக 30.08.2025 அன்று நடைபெற்றது .
இந்தநிலையில் இன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். சோழிங்கநல்லூர் தொகுதி மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம்.
பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றோம்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.