முன்னாள் அதிமுக பிரமுகர் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ (முன்னாள்) நாளேடான நமது எம்ஜிஆர் ஆசிரியரும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான மருது அழகுராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிட்ட மருது அழகுராஜ், நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் 2018 முதல் 2022 வரை தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் சிறந்த தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த மருது அழகுராஜ், நமது நாளிதழில் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமை அதிமுக உரிமை மீட்பு குழுவில் இணைந்து பணியாற்றினார். திடீரென ஏற்பட்ட ஓபிஎஸ் மீதான அதிருப்தி காரணமாக தற்போது திமுகவில் இணைந்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.