புதுச்சேரியில் குடிநீரில் நச்சு கலந்ததால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 10-ஆம் தேதி முதல், உருளையன்பேட்டை கோவிந்தசாலை மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, திமுக மற்றும் அதிமுக கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் தனித்தனியே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
போராட்டத்தின்போது, திமுக மற்றும் அதிமுகவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. நாங்கள் இங்கு கூடி நல்ல குடிநீர் வழங்கக் கோரிப் போராடுகிறோம்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக யூனியன் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிகமாக குடிநீர் பாட்டில்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Edited by Siva