தமிழில் 100 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ.10,000/-... அதிரடி அறிவிப்பு!
Dinamaalai September 20, 2025 06:48 PM


 
 பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில்  முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.


இந்த விழாவை தொடங்கி வைத்து  பேசிய அன்பில் மகேஸ் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இது, மாணவர்களை தமிழ் மொழியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும்,” என அறிவித்துள்ளார்.  


கல்வி மற்றும் சுகாதாரத்தை இரு கண்களாக கருதி, முதல்வர்  ஸ்டாலின் இலக்கை தாண்டி உழைத்து வருகிறார்,” எனக்  குறிப்பிட்டார். அவர், அரசின் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றப் பணிகள் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த ஆசிரியர்கள் கல்வித்துறையின் குடும்பத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ், ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில்  “ஆசிரியர்களே, 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத்தேர்வு வரும், எங்களுக்கு பொதுத்தேர்தல் வரும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். இது அரசியல் பேச்சு அல்ல, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்காகவே பேசுகிறேன்,” என உரை நிகழ்த்தினார்.  இந்த பேச்சு, ஆசிரியர்களுக்கு பொறுப்பு மற்றும் உற்சாகத்தை ஊட்டுவதாக அமைந்தது. தமிழக பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, இந்த புதிய ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது எனவும் பேசியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.