Vijay Antony: காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்!
TV9 Tamil News September 20, 2025 08:48 PM

நடிகர்விஜய் ஆண்டனியின் (Vijay Antony) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக பல படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்த இவர், பின் “நான்” (Naan) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் ஜீவா  சங்கர் (Jeeva Shankar) இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிகராக நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பது மற்றும் இசையமைப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம் போன்ற பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் பண்முக தன்மை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் நடிப்பில் சக்தித் திருமகன் (Sakthi Thirumagan) என்ற படமானது, 2025 செப்டம்பர் 19ம் தேதியான இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி, சாதிப்பதிலும் மற்றும் மன்னிப்புக் கேட்பதிலும் ஒருபோதும் தயங்கமாட்டேன் என கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : வின்டேஜ் கதையில் கார்த்தி.. விறுவிறுப்பாக உருவாகும் மார்ஷல்!

மன்னிப்பு கேட்பது குறித்து விஜய் ஆண்டனி சொன்ன உணர்வுபூர்வமான விளக்கம் :

அந்த நேர்காணலில் நடிகர் விஜய் ஆன்டனி, ” சைக்காலஜி மைண்ட் பிளாக்கை நான் சிறுவயதிலியே உடைத்துவிட்டேன். அது எவ்வாறு என்று தெரியவில்லை. நிறைய படங்களில் இருந்து கற்றுக்கொண்டேன். நான் எதாவது தவறு செய்தல் உடனே எனது மனைவியில் காலில் விழுந்துவிடுவேன். அவரின் காலை பிடித்துக்கொண்டே இருப்பேன். எனது மகளை அழைத்து, உன் அம்மாவின் காலில் விழுந்துவிட்டேன் என்னை மன்னிக்க சொல் என கேட்பேன், இது நான் உண்மையாகவே சொல்கிறேன்.

இதையும் படிங்க : என்னோட முதல் ரிஜெக்ஷன் அதுதான்.. உண்மையை உடைத்த சிம்ரன்!

எனது மகளின் காலில் கூட நான் விழுவேன், சில நேரம் கோபம் வந்து எனது மகளிடம் சண்டை போட்டேன் என்றால், அவரிடம் மன்னிப்புக்கேட்டு காலில் விழுவேன். என்ன இருக்கிறது ஒரு வாழ்க்கைதான், சாதிக்கிறதிலும் மற்றும் மன்னிப்பு கேட்பதிலும் நான் ஒருபோதும் தயங்கியதில்லை” என நடிகர் விஜய் ஆண்டனி உணர்ச்சிபூர்வமாக தனது மனநிலையை கூறியுள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர்கள் இவ்வரும் ஒரு நபரால் இருக்கமுடியுமான என தங்களின் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மன்னிப்புக்கேட்பது பற்றி விஜய் ஆண்டனி பேசிய வீடியோ பதிவு :

#VijayAntony – The Man with zero Ego🫡♥️🫶pic.twitter.com/j1nVZMyfca

— AmuthaBharathi (@CinemaWithAB)

விஜய் ஆண்டனியின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகியுள்ளது. மார்கன் படமானது கடந்த 2025 ஜூன் 27ம் தேதியில் வெளியானது. இந்த படத்தின் தொடர்ந்து 2 மாதங்களில் அடுத்த படமானது சக்தித் திருமகன் படமானது 2025 செப்டம்பர் 19ம் தேதியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.