தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தெரு நாய் தொல்லையிலிருந்து விடுபட பொதுமக்களும் பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அதாவது தெருவில் போகும் பொதுமக்களை தெரு நாய்கள் திடீரென கடித்து விடுகிறது.
மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் இடைஞ்சல் செய்து வருகிறது. இதுதவிர தெரு பகுதியில் விளையாடும் குழந்தைகளை அவ்வப்போது தெருநாய்கள் கடித்து விடுகிறது. இந்நிலையில் தெரு நாய் கடியிலிருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதி மக்கள் புதியதாக ஒன்றை முயற்சி செய்துள்ளனர்.
அதாவது துணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் நீலத்தை நீரில் கலந்து பாட்டில்களில் நிரப்பி வீட்டின் முன் வரிசையாக வைத்திருக்கின்றனர். இவ்வாறு நீலம் கலந்திருக்கும் தண்ணீர் பாட்டில்களுக்கு தெருநாய்கள் பயப்படும் என பொதுமக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு தெரு நாய்களுக்கு பயந்து பொதுமக்கள் புதிய முயற்சியை கையாண்டு இருப்பது வித்தியாசமாக இருக்கிறது.