ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு விழாவில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும். வரி குறைப்பால் நிறைய பொருட்களை மக்கள் வாங்குவார்கள். வேலைவாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி உயரும். தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பலவற்றை செய்கிறார். ஒவ்வொரு நுணுக்கத்தையும் புரி்ந்துகொண்டு தமிழகத்திற்கு நல்லது செய்கிறார். நாடு வளர்ச்சி அடைய பிரதமர் மோடி தொலைநோக்குடன் சிந்தித்து செயலாற்றிவருகிறார். ஜிஎஸ்டி குறைத்து நாடகம் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் இல்லை. அருண் ஜெட்லியோ, மோடியோ ஜிஎஸ்டி வரியை நிர்ணயம் செய்யவில்லை. எல்லா மாநில நிதியமைச்சரும் கலந்தாலோசித்து எடுத்த முடிவுதான் இந்த வரி குறைப்பு. ஜிஎஸ்டியின் பலனை இந்தப் பண்டிகை காலத்திலேயே பெற்று மக்கள் பயனடைவர்” என்றார்.