சென்னை ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், கிண்டிக்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட 1.43 ஹெக்டேர் நிலத்தினை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ளசிங்காரவேலர் மாளிகையில் இயங்கி வருகின்றது. இந்த மாளிகையில் 10 நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கிண்டியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்ட தேவையான 1.43 ஹெக்டேர் நிலத்தினை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அரசாணைப்படி நில ஆவணங்களில் ஒரு மாதத்திற்குள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது