முத்தாரம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு, காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!
Dinamaalai September 21, 2025 03:48 PM

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் சுப்பையா மனைவி பார்வதி (23), இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் மகன் வேலுச்சாமி (28). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்களாம். இந்நிலையில் இருவரும் நேற்று காலை நெல்லையில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இருவரும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் மனம் மாற்றம் ஏற்பட்டு,  குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று தாங்கள் விஷம் அருந்தி விட்டதாகவும் தங்களை காப்பாற்றுமாறும் கூறியுள்ளனர்.  இதனையடுத்து போலீசார் அவர்களை ஆட்டோ மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் ஜோடியான இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.